ஒரு
குயிலின் குரல்—இயற்கை வாழ்த்து.
இயல்பாம்
இயக்கம் இயற்கை யுனது
செய்பருவச்
சீரே சிறப்பு.
பொருள்:இயல்பான
இயக்கம் கொண்ட இயற்கையே
உன்
செயலாம் பருவங்களும் சமமானால் சிறப்பாகும்.
----------------------------------------------------------------------------------------------------------------
அறிவினிற்
தேடல் செயற்கை வியப்பு
அனைத்தும்
இயற்கை யளிப்பு.
பொருள்:மனிதன்
தன் அறிவால் தேடிக்காணும் பயன்தரும்
செயற்கை
விந்தை விளைவுகள் அனைத்தும் இயற்கை
அளித்தக்
கொடையே!
----------------------------------------------------------------------------------------------------------------
இயற்கை
யருளும் செயற்கைப் பயன்கள்
நயக்க
அணிசெய் மலர்.
பொருள்:நமக்குக்
கிடைத்துள்ள அறிவியல் கண்டுப் பிடிப்புக்கள்
எல்லாம்
இயற்கைக்கு நாம் அணிவிக்கும் நன்றி மலர்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------
கோபத்துக்
காளாகாத் தேடல் முடிவலோ
பாவங்கள்
இல்லாப் பயன்
பொருள்:
இயற்கையின் கோபத்திற்கு ஆளாகாமல் மனிதன்
ஆய்ந்து
தேடும் பயன்களால் எந்தக் குற்றமும் நேராது.
----------------------------------------------------------------------------------------------------------------
குமுறலுஞ்
சீறலும் சீண்டா(து) அறிவால்
அமுதங்
கடைவம் நலம்.
பொருள்:இயற்கையின்
இயல்புக்கு மாறான அறிவியல்
தேடல்களை
மேற்கொண்டு அதனைச்சீண்டிவிட்டு
அதன்
குமுறலை விளைவிக்காமல் அதனிடம்
உயிர்
காக்கும் அமுதம் போன்ற பொக்கிசங்களைத்
தேடுவோம்.
--------------------------------------------------------------------------------------------------------------
செயற்கை
விளைந்திடும் சீரியப் பொறிகள்
இயற்கை
யருளியக் கொடை.
பொருள்:தேடல்
அறிவால் செயற்கை விளைத்த அற்புதக்
கருவிகள்
எல்லாம் இயற்கை நமக்களிதக் கொடை.
----------------------------------------------------------------------------------------------------
வானத்துத்
தேடல் வளர்ஞானக் கூடல்,எம்
மானவர் பெற்ற கொடை
பொருள்:
வானில் மேற்கொள்ளும் ஆய்வுகளும் அதற்கான
ஞானமும்
நாளுக்கு நாள் கூடுவதும் வானம் தன்னுள் ஒளித்து
வைத்துள்ள
அளவிடமுடியாச்செலவங்களே!
--------------------------------------------------------------------------------------------------------------------
இயற்கை
கெடுக்கா இயல்புகள் ஊக்கும்
செயற்கையால்
சேர்ப்போம் சிறப்பு.
பொருள்:நாம்
இயற்கையைப் பகைத்துக் கொள்ளாமல்
இன்னும்
பல பல உலகங்களைக் கண்டறிவோம்.
-------------------------------------------------------------------------------------------------------------------
காப்போம்
இயற்கையைக் கண்ணென, நம்மையும்
காப்ப
(து) இயற்கையே காண்!!
பொருள்:வளங்கள்
நிறைதுள்ள இயற்கையை நாம்
காப்பது
நம் பொறுப்பானால்.இயற்கை நம்மைக் காக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கண்ட பலன்களைக்
காணிக்கை ஆக்(கு)இயற்கை
தண்டனை தாரா(து)
அறி
பொருள்:நாம்
நம் அறிவால் இயற்கையில் தேடிக்கண்ட
அத்தனை
செயற்கைப் படைப்புக்களையும் இயற்கை
எனும்
இயற்கைக்கு காணிக்கையாகப் படைப்போம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கொ.பெ.பி.அய்யா.
-------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment