Wednesday, 18 December 2013

வேண்டாம் மது.

மதுவை மறப்போம்.

குடிகாரப் பாவிகளால்
குடும்பங்கள் வாடுது.
விடியலைப் பாராமல்
வேரோடு  மடியுது.
ஒழித்திடுங்கள மதுவினை
உளமாற வாழ்த்துவர்.

வேசி போலே போதையோ
காசை யெல்லாம்  பறிக்குது.
கடனாளி ஆக்குது.
உறவுகளை  அழிக்குது.
வேண்டாம் அந்தக் குடிப்பழக்கம்
விட்டு விடு தோழனே

மரியாதை தொலையுது
மானங்கெட்டு ஒழியுது.
பணமிழந்து அலையும் போது
குணம் மறந்து திருடுறான்
சாக்கடையும் தெரியாமல்
சந்தணமாய் பூசுறான்.

உழைச்ச காசு போகுது
உடம்பழிஞ்சு சாகுது.
குடுமபம் வறுமை ஆகுது.
குழந்தை பிச்சை எடுக்குது.
குடியிருக்க வீடில்லாம
மடிய விரிச்சு கிடக்குது

தாய்க்குலத்தின் வேதனை
தந்தைகளே சிந்திப்போம்..
மறந்திடுவோம் மதுவினை
பிறந்தெழுவோம் புதுப்பிறவி
குழந்தைகளை படிக்க வைத்துஞ
வளம் செய்வோம் வாழ்வினை.

கொ.பெ.பி.அய்யா

No comments:

Post a Comment