வேண்டும்!வேண்டும்!
பூமியில் பிறவி வேண்டும்.
பிறவியில் மனிதம் வேண்டும்..
மனிதனில் மனம் வேண்டும்.
மனத்தினில் அன்பு வேண்டும்.
அன்புக்குக் கருணை வேண்டும்.
கருணைக்கு இரங்க வேண்டும்.
இரங்கிட அருள் வேண்டும்.
அருள்பெறத் தூய்மை வேண்டும்.
தூய்மைக்குப் பக்தி வேண்டும்.
பக்திக்கு தேடல் வேண்டும்.
தேடலுக்கு மெய்மை வேண்டும்.
மெய்மைக்கு வலிமை வேண்டும்.
வலிமைக்குத் தியானம் வேண்டும்.
தியானிக்கச் சிந்தை வேண்டும்.
சிந்தைக்குள் அமைதி வேண்டும்.
அமைதிக்குத் தீர்க்கம் வேண்டும்.
தீர்க்கம்பெற ஞானம் வேண்டும்.
ஞானம்பெற யோகம் வேண்டும்.
யோகம்பெற பயிற்சி வேண்டும்.
பயிற்சிக்குப் முயற்சி வேண்டும்.
முயன்றிடத் துணிவு வேண்டும்..
துணிந்திட உறுதி வேண்டும்.
உறுதிக்குப் பற்று வேண்டும்.
பற்றுக்கு நம்பிக்கை வேண்டும்..
நம்ப ஒரு மாரக்கம் வேண்டும்.
மார்க்கம் அதைத் தேடவண்டும்.
மார்க்கஞ்சேர மூலம் வேண்டும்.
மூலமதைப் பற்ற வேண்டும்.
பற்றிடப் பிரம்மம் வேண்டும்
பிரம்மத்தில் ஐக்கியம் வேண்டும்.
ஐக்கியத்தில் தொலைய வேண்டும்
தொலைவதில் நிலை வேண்டும்.
நிலையத்தில் சூன்யம்.
சூன்யம் சாந்தி மயம்
சாந்தியே ஜோதியாகும்
ஜோதியே இறையாகும்.
கொ.பெ.பி.அய்யா.
பூமியில் பிறவி வேண்டும்.
பிறவியில் மனிதம் வேண்டும்..
மனிதனில் மனம் வேண்டும்.
மனத்தினில் அன்பு வேண்டும்.
அன்புக்குக் கருணை வேண்டும்.
கருணைக்கு இரங்க வேண்டும்.
இரங்கிட அருள் வேண்டும்.
அருள்பெறத் தூய்மை வேண்டும்.
தூய்மைக்குப் பக்தி வேண்டும்.
பக்திக்கு தேடல் வேண்டும்.
தேடலுக்கு மெய்மை வேண்டும்.
மெய்மைக்கு வலிமை வேண்டும்.
வலிமைக்குத் தியானம் வேண்டும்.
தியானிக்கச் சிந்தை வேண்டும்.
சிந்தைக்குள் அமைதி வேண்டும்.
அமைதிக்குத் தீர்க்கம் வேண்டும்.
தீர்க்கம்பெற ஞானம் வேண்டும்.
ஞானம்பெற யோகம் வேண்டும்.
யோகம்பெற பயிற்சி வேண்டும்.
பயிற்சிக்குப் முயற்சி வேண்டும்.
முயன்றிடத் துணிவு வேண்டும்..
துணிந்திட உறுதி வேண்டும்.
உறுதிக்குப் பற்று வேண்டும்.
பற்றுக்கு நம்பிக்கை வேண்டும்..
நம்ப ஒரு மாரக்கம் வேண்டும்.
மார்க்கம் அதைத் தேடவண்டும்.
மார்க்கஞ்சேர மூலம் வேண்டும்.
மூலமதைப் பற்ற வேண்டும்.
பற்றிடப் பிரம்மம் வேண்டும்
பிரம்மத்தில் ஐக்கியம் வேண்டும்.
ஐக்கியத்தில் தொலைய வேண்டும்
தொலைவதில் நிலை வேண்டும்.
நிலையத்தில் சூன்யம்.
சூன்யம் சாந்தி மயம்
சாந்தியே ஜோதியாகும்
ஜோதியே இறையாகும்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment