Saturday, 21 December 2013

ஊடலா கோபமா!

ஊடலா? கோபமா?

கூடலில் கோபமும் ஊடலும்
கலவை யாகவே  இருக்கட்டும்
கோபமோ ஊடலோ எதுவானாலும்
கூடலின் போது கொள்ளை இலாபம்.

கோபத்தின் காலம் நீளம்.
ஊடலின்  காலம் குறுக்கம்..
கோபந் தீர்ந்த கூடலோ இறுக்கமானது..
ஊடல்  தீர்ந்த கூடலோ சுகமானது.

கோபம் தொலைய மௌன மொழியும்,
ஊடல் கலைய  சாடைமொழியும்,
இடைவெளி கரைத்துக் கூடலாக்கும்.
இனிப்புங் கூடிய காதலாக்கும்

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment