Wednesday, 18 December 2013

நித்தியமில்லை வாழ்வு.

வாழ்க பத்திரம்

வதந்தியும் ஒருநாள் வாய்மை ஆகலாம்.
கதையும் மருவி காட்சி தோணலாம்
சத்தியம் அதுவும் புத்தியும் மாறலாம்
பத்தினி அவளும் சத்தியம் சோரலாம்

நித்தியமில்லை நிலையற்ற வாழ்வில்
பத்திரமாய் வாழ பழகந்தப் பாங்கில்.!
உத்தமம் ஆவது உனக்குள்ளிருப்பதால்
பத்தியக் காந்தியின் பாதம் தொடர்ந்து செல்.!

பிறர்க்கின்னா செய்யாது பிழைபட வாழாது
பிறப்பது உலகின் பேரெனக்கொண்டு
உறுதியில் நின்று உண்மையை மதித்து
பெறுவதில் திண்ணம் பிணியிலா வண்ணம்.

எப்படியும் வாழலாம் என்பதை விடுத்து
இப்படித்தான் வாழ்வு என்பது உணர்ந்து
அப்படி வாழ்ந்தால் அகிலத்திற் சுகமே!
செப்படி இதுவே சீர்படும் உலகே!

கொ.பெ.பி.அய்யா.
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10940432_626995844096948_5901032410426348443_n.jpg?oh=71d167acdd58a7cd2f0c29bcbf15bf59&oe=5527A9F7&__gda__=1432774699_233aacfeb10d8c8c6ba4272e82e208a3

No comments:

Post a Comment