Friday, 20 December 2013

இலவசங்ள் எதற்கோ?

உள்ளம் கொண்டு தேடுவோம்.

குடிசைகள் புலம்பேறுமோ!
கோபுரங்கள் கொலுவேறுமோ!
வறுமையதன் கோடாறுமோ!
வாழ்வதன் வளம்தேறுமோ!

அழகுக்கது அசிங்கமாச்சோ!
அதனாலது அகற்றலாச்சோ!
அவலங்கள் அழகாச்சோ!
அதற்கென்ன வழியாச்சோ!

இலவசங்கள் எதற்காமோ!
ஏற்றவது துணையாமோ!
வீடொன்று சொந்தமாமோ!
கூடொன்று கொள்ளலாமோ!

வாடைகைக் குடித்தனமோ!
வாட்டும் மின் கட்டணமோ!
மீட்டரெட்டுத் தீர்பணமோ
கேட்பதார் நேர் மனமோ!

முறவாசல் கொடுமையோ
முன் வினைப் பாவமோ!
சந்திரமதி நிலமையோ!
காலகண்டிக் கடுமையோ!

விலைவாசி ஏற்றமோ!
விற்பவன் கூற்றமோ!
விவசாயி பாவமோ!
விதி என்ன செய்யுமோ!

இடைத்தரகன் நீசனோ!
கடைத்தொளித்த காசனோ!
கிடைக்கரியச் செய்வனோ!
தடை யார் ஆய்வனோ!

சினிமாதான் வளஞ்செய்மோ!
சிதைந்ததுஞ் சீர்செய்மோ!
ஊர் வாழ ஆனதோ!
நூறாண்டும் காணுதோ!

நல்லான் போல் நடிப்பனோ!
நாடுந்தான் நம்புதோ!
வசனங்கள் வாழ்வதோ!
வடித்தவனும் நடப்பானோ!

தொழிலதுங் கலையதோ!
தொழுபவன் மடையதோ!
விழியதில் களையதோ!
விழித்திடத் தடையதோ!

தொண்டுள்ளம் தொலைந்ததோ!
பண்டுள்ளம் கலைந்ததோ!
துண்டுள்ளம் தலையதோ!
கண்டுள்ளம் அலையுதோ!

கட்சிக்குள் தொலைவோமோ!
கணக்கிடவும் மறப்போமோ!
இச்சைச் சொல் கேட்போமோ!
இழந்ந்து நாமே படுவோமோ!

நல்லோரும் வருவரோ!
நல்லாட்சித் தருவரோ!
உள்ளம் கொண்டாய்வமோ!
உரியவரைத் தேர்வோமோ!

தொடர் தலைக் கட்சியோ!
தொடரும் நிலை ஆபத்தோ!
சூழும் தனம் அடிமையோ!
வீழும் சுயம் உரிமையோ!

உள்ளம் தூய்மை கிடைப்பரோ!
உற்று உற்றுத் தேடலாமோ!
நட்டு முன்  வருவ்ரோ!
நாம் தேர்ந்து வாழ்வோமோ!


கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment