உஷார்!
சுயநலக் கூட்டங்கள்
சுற்றிச் சுற்றி வளையுமே..
தயக்கமில்லாமலே பொய்
தைரியமாய் சொல்லுமே.
உனக்காக உழைப்பதாக
உண்மைகளை மறைக்குமே.
தனக்காக உன்னையுந்தான்
தர்மம் விலகச் செய்யுமே.
செய்யாததை செய்ததாக
சீண்டி யுன்னை கெடுக்குமே.
பொய்யானதை புரிந்தவரை
புறக்கனித்தால் நல்லதே..
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment