எதுக்கு......அதுக்கு.
அத்தை மகனே ஆசை ராசா!
வெட்டு அருவா மீசை நேசா!
பூத்து இருக்கு அழகு ரோசா!
காத்து இருக்குது எதுக்கு
சேத்து அணைக்க அதுக்கு.
சேத்து அணைக்க அதுக்கு.
மல்லு வேட்டி மடிச்சிக் கட்டி
புல்லுக் கட்டத் தூக்கி வச்சி
வில்லா வளைஞ்சி நெளிஞ்சி
வில்லா வளைஞ்சி நெளிஞ்சி
ஜல்லிக் கட்டு எதுக்கு
மல்லுக் கட்டு அதுக்கு
மல்லுக் கட்டு அதுக்கு
அறியா வயசு புரியா மனசு
பறியா இளசு பழமோ தினுசு
அனுபவம் புதுசு அனுபவி பரிசு.
அவசரம் மச்சான் எதுக்கு
அவசியம் என்ன அதுக்கு?
அனுபவம் புதுசு அனுபவி பரிசு.
அவசரம் மச்சான் எதுக்கு
அவசியம் என்ன அதுக்கு?
அறியத் துடிக்கும் அடங்கா வயசு
அனுபவம் படிக்கும் அறியா இளசு
நெருங்கும் போது குலுங்கும் மனசு.
அனுபவம் படிக்கும் அறியா இளசு
நெருங்கும் போது குலுங்கும் மனசு.
மசங்குது கண்கள் எதுக்கு
கசங்குது பெண்மை அதுக்கு
கசங்குது பெண்மை அதுக்கு
சின்னஞ் சிறுசா கன்னம் போட்ட
என்னெஞ் சதிலே எண்ணம் ஊட்ட..
கண்ணா மூச்சி ஆடித் தேடி
கண்டதும் என்னை எதுக்கு
சொன்னதும் முன்னே அதுக்கு.
சொன்னதும் முன்னே அதுக்கு.
மண்ணைக் கூட்டி மனையக்கட்டி
என்னைக் கட்டி ஏதோச் செஞ்சி
இன்னைக் கதுதான் விளஞ்சு நிக்கி
உன்னைத் தொட்டது எதுக்கு
எண்ணம் எட்டுது அதுக்கு.
எண்ணம் எட்டுது அதுக்கு.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment