முத்திய இளமை!
பத்தெட்டு பதினெட்டு
முத்தெட்டு மூப்பேது?
அத்தெட்டு ஆளெட்டு
நித்தெட்டு அறிவது!
சத்தெட்டு சதையெட்டு
ஒத்தெட்டு மூப்பேது?
புத்தெட்டு பூத்தெட்டு
நித்தெட்டு இளசது.
எத்தெட்டு இதுவெட்டு
இத்தெட்டு மூப்பேது?
உத்தெட்டு ஊத்தெட்டு
நித்தெட்டு இதயமது.
நத்தெட்டு நசையெட்டு
பித்தெட்டு மூப்பேது?
வித்தெட்டு கூத்தெட்டு
நித்தெட்டு காதலது.
கத்தெட்டு கதையெட்டு
வெத்தெட்டு மூப்பேது?
மொத்தெட்டு மூத்தெட்டு
நித்தெட்டு வளமது.
பத்தெட்டுப் பதினெட்டு
அத்தொட்டுத் தாண்டாது.
முத்திட்ட இளமையிதை
முதுமையென இழியாதீர்!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment