Saturday, 21 December 2013

முதல் வணக்கம்.

முதல் வணக்கம்!!

 முழுமுன் முதல் வணக்கம்.
தொழும்பின் தொடர் வணக்கம்.
வணக்கம்தான் அறிமுகம்.
வளர்ச்சிக்கும் விண்ணப்பம்.

அன்னைக்கும் மண்ணுக்கும்
அழுகையாய் முதல் வணக்கம்,
தந்தைக்கும் முந்தைக்கும்
தஞ்சிரிப்பு முதல் வணக்கம்.

பேசிய முதல் பேச்சாம்
தேசிய சொல்லாச்சாம்.
அம்மாவுக்கு முதல் வணக்கம்.
அகரத்தமிழ் மழலையாக்கும்.

எழுதவும் பழகவும்
கிறுக்கலே முதல் வணக்கம்.
விழுவதும் எழுவதும் 
அறிவுக்கு முதல்வணக்கம்.

 எனத் தொடங்கும் போது
ஆசிரியர்க்கு முதல் வணக்கம்.
 எனத் தொடரும் போது
இறைவனுக்கு முதல் வணக்கம்.

இறைவனென்றால் இயற்கையே.
அறியவொண்ணா அருமையே.
மருவில்லா வெறுமையே.
முதல்வணக்கம் குழந்தையே.

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment