செதுக்குங்கள் சிலையாகிறேன்..
கற்றது கைம்மண் ணளவேயென
உற்றது சொன்னாள் ஒரு கிழவி.
அந்தக் கைமண் ணளவாவது
கற்றேனோ தெரியவில்லையே!!
தலைவாசல் வழியே நுழையவும்
தயங்கித்தான் நானும் மெல்லவும்
புறவாசல் எட்டித்தான் பார்க்கிறேன்
பாரத்துத்தான் விட்டீரோ!
நானோ ஒரு பாறாங்கல்தான்........
என்னைப் பார்ததுப் பார்த்து
பக்குவமாய் செதுக்குவீரானால்
நானுங்கூட கலைமிளிரும் சிலையாவேன்.
செதுக்குவீர் ........ செதுக்குவீர்.
சிற்பமாகும்வரை செதுக்குவீர்!!
பொறுக்கிறேன் பொறுக்கிறேன்
சிறக்கும்போது சிரிக்கிறேன்.
கொ.பெ.பி.அய்யா.
பொறுக்கிறேன் பொறுக்கிறேன்
சிறக்கும்போது சிரிக்கிறேன்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment