Wednesday, 18 December 2013

வாழ்க தொழிலாளி!

வாழ்த்துவோம் தொழிலாளரை!!

வாழ்ககை என்பதே போராட்டம்
வாழத் தினமும் போராடுவோம்.
நாளும் போராட்டக் களமாகும்.
வாழ்ந்திட அதுவே சுகமாகும்.

வயிறின் அளவோ ஒருச்சாணே!
உயிரின் உழைப்போ அதற்கல்ல!
உழைக்கும் புனிதப் போராட்டம்
பிழைக்கும் உலகை காப்பதற்கே.

தொழில் தொழுதாலே அருள்செய்யும்,
தொழில்செய்தாலே பொருள்செய்யும்.
தொழில் புரிவோரே துணை புரிவார்.
தொழிலாளர் வாழ  வாழ்த்துவோம்.

கொ.பெ.பி.அய்யா






No comments:

Post a Comment