Monday, 23 December 2013

வடபழனி வடிவேலன்.

சென்னை வாசி சிங்காரன்.

தென் பழனி போகலியோ!
வட பழனி தேடுங்கள்.
தங்க மயில் ஆண்டியவன்
தரிசனமும் நாடுங்கள்.

திருச்செந்தூர் காணலியோ!
சிறுவாபுரி கூடுங்கள்.
வெற்றி வேலன் அருட்கோலம்
பற்றி மனை பெருகுங்கள்.

மன்றம் அது திருக்குன்றம்
மணக்கோலம் பார்க்கலியோ!
குன்றத்தூர் ஓடுங்கள்
கண்டு மனம் நிறையுங்கள்.

கழுகுமலை அறியலையோ!
கந்தக்கோட்டம் வாருங்கள்.
அழகன் அவன் திருக்கோலம்
அமைந்த புகழ் காணுங்கள்.

திருத்தணிகைப் பக்கம்தான்
வருத்தங்கள் தணிக்கத்தான்.
திருமணங்கள் செய்திடத்தான்
பொருத்தமான திருத்தலம்தான்.

பழம் உதிர்த்துப் பாட்டிக்கு
பாடம் சொன்ன சோலையது
அப்பனுக்கு வேதம் ஓதும்
அவனிருக்கும் சாமி மலை.

எல்லாமே பெசனட் நகர்
எங்கேயும் அலையாதே.
சென்னை வாசி சிங்காரன்.
சிங்கார வேலன் வாழ்க!

கொ.பெ.பி.அய்யா.









No comments:

Post a Comment