மணி கட்ட யார்??
பொய்யான கூட்டங்கள்
புனைந்திடும் வேடங்கள்
பணப்பேய் ஆட்டங்கள்
மணிகட்டத் துணிவதார்?
அறக்கட்டளைப் பேரிலே!
அநியாயப் பொய்யிலே!
கல்வியும் மருத்துவமும்
செல்வர் பை அய்யகோ!
எச்சில்க்கை நக்குவோர்
பிச்சையிடத் துணிவரோ!
பச்சமில்லா பாவியரே!
பகல்வேடம் போடுகிறார்!
நல்ல கல்வி மருத்துவங்கள்
வல்லவரே பெறும் வளங்கள்..
உள்ளதாகிப் போனதாலே
எல்லோர்க்கும் எல்லாமெப்போ?
அரசியல் யோக்யர்கள்.
புரவலர் புண்ணியர்கள்.
புருசனில்லா வீட்டுக்கு
கரிசனமா?காவலா?
கரிசனமா?காவலா?
எலிகளென ஏழை பாவம்.
ஒளிவதுதான் கோழை லாபம்.
கர்ணராக பூனைகளும்
வர்ணம் பூசி ஏய்க்கின்றன.
ஆளுக்காள் அழிப்பதையே
அரசியலாய் கொண்டிருப்போர்
நாட்டுக்கென்ன நன்மை செய்வார் ?
வீட்டுக்கென்றே தன்மை கொள்வார்.
ஆளுக்காள் அழிப்பதையே
அரசியலாய் கொண்டிருப்போர்
நாட்டுக்கென்ன நன்மை செய்வார் ?
வீட்டுக்கென்றே தன்மை கொள்வார்.
இலவசக் கல்வி தந்தார்.
தலைவரெனத் தகுதி கொண்டார்.
கர்மவீரர் தோற்ற நாளே
தர்மம் தானே நீற்றினாளே.
காமராசர் பிறப்பாரோ!!
ஹோமமொன்றும் வளர்ப்பாரோ!!
சேமம் மீண்டும் தருவாரோ?
சாமி ஆண்டும் அருள்வாரோ?
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment