இத்தோடு நிறுத்துங்கள்.
ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?
இதற்குத் தீர்வுதான் என்ன?
இப்போது என்ன விலை ?
எவருக்கும் தெரிய வில்லை...
"கச்சா எண்ணை ஏறிப் போச்சு
டாலர் மதிப்பும் குறைஞ்சு போச்சு"
இப்படியே பாடிப்பாடி எமது
எலும்பும் முறிஞ்சு போச்சு.
கணக்குப் போட்டால் நேரில்லை.
விளக்கம் கேட்டால் மாறில்லை.
வழிமாற்றம் வேறில்லையோ!
வலியாற்றும் ஆய்வில்லையோ!
தாங்கு மட்டும் தாங்கியினி
தாங்கும் சக்தி இல்லையே.
போதுமே இத்தோ டெல்லாம்.
நிறுத்தினால் நல்லதே.
பெட்ரோலும் டீசலும்
அடிப்படைத் தேவைகள்.
அவைகளின் விலையேற்றம்
அனைத்தையுமே பாதிக்கும்.
புரிந்து கொண்டால் நலமாகும்
புரியாவிடிலும் புரியச்செய்வோம்.
பொறுக்கும் வரை பொறுக்கிறோம்.
பொறுமைக்கும் எல்லையுண்டே.
பொறுமையைச் சாதகமாய்
புரிந்திட்டால் பொறுப்பல்ல
நேரம் வரக் காத்திருப்போம்
நிச்சய்யம் நிரூபிப்பபோம்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment