Friday, 20 December 2013

நந்தவனம்

நந்தவனம்

அந்தி வானமோ!--அழகு 
நந்தவனமோ!--அடியே
என்ன சொல்லுவேன்--அய்யோ
கண்கள் பாவமோ!

வண்டும் தயங்குமோ!--இதழ்
என்றும் மயங்குமோ!--தேன்
உண்டாடுமோ!-உண்டும்
திண்டாடுமோ!

வின்மீன்களோ!-பேசும்
கண்தான்களோ!-கூசும்
பெண்மான்களோ!-உலவும்
மண்தான்களோ!

நிலவதுதானோ!--நிலம்
உலவதுதானோ!--கண்
பிழையதுதானோ!--ஒளிர்
முகமதுதானோ!

கண்டது அவளையோ!--பூக்கள்
கொண்டது சிரிப்பையோ!-மணம்
வென்றது யாரதோ!-மலர்
சென்றது நாணியோ!

பரிசந்தொடுவளோ!-வாசம்
விரிந்தும் கவருதோ!-நேசம்
புரிந்தும் மலர்வளோ-பாசம்
சொரிந்தும் அணைவளோ!

என்னைக்கண்டதோ!-மலர்
ஏனோ முறைக்குதோ!-மெய்மை
பெண்ணைக்கண்டதோ!-வளர்.
காதல் கொண்டதோ!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment