இதய சங்கமம்!
இரும்புக்கோட்டை எதற்காகும்
துருவழிக்குமே---கற்பினும்
சிறப்பான தூய நட்பே
உறுதிக் காப்பாகும்!
பிறைபோன்று வளர்வதுதான்
நிறையும் நட்பாகும்--அறிவு.
குறைந்தோரின் பழக்கமோ
கரையும் நிலவாகும்!
படிக்கப்படிக்க ஞானந்தரும்
வடித்த நூலது--அன்பில்
பழகப்பழக பழமை கூடும்
வளமை நட்பாகும்!
சிரித்துப்பழக நண்பரென்றால்
கிறுக்கன் போதுமே--தவறு
இடித்துக்குட்டித் திருத்துவோரே
இயல்பு நண்பராம்!
நேரே கண்டு தழுவுதல்தான்
நட்பு என்றில்லை--நேர்
எண்ணங்களே இருந்தாலாகும்
இதய சங்கமம்!
முகம் பழகும் பழக்கமெல்லாம்
முகவுறை மட்டும்---காதல்
அகம் தழுவும் கேண்மையே
ஆன்ம நட்பாகும்!
நல்வழிக்கு
நடத்துபவன்
நல்ல நண்பனாம்---அவன்
அல்லல் நேரும் போதுங்கூட
தோள் கொடுப்பானாம்!
தன் துயரில் உழ்ல்வதாக
தானே துடிப்பான்--மென்மை
பெண் மானங்காப்பது போல்
கண்ணனாவானே!
நட்பினும் உயர் மேன்மை
நடப்பனில் உண்டோ--அது
எப்போதும் உதவத்தேடும்
ஏட்டியம் வங்கி!
அளந்தாய்ந்து தொடர்வதல்ல
ஆக்கமுறும் நட்பாம்---வெறும்
அலங்காரப் பேச்செல்லாம்
ஆவதில்லை நட்பாம்!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment