தண்ணிக் குடம்
எடுத்து(தெம்மாங்கு)
தண்ணிக் குடம்
எடுத்து
தனிவழியே போற புள்ள!
எண்ணி அடி எடுத்து
எண்ணுவதும் என்ன
புள்ள?
முன்ன ஒளிச்சு வச்சு
முன் னழகு மறச்சயோ!.
பின் னழகு அள்ளுதடி-பாவி
என்னை அது கொல்லுதடி..-
எண்ணியும் நெனச்ச முகம்
தண்ணி யிலும் தெரிஞ்சிருச்சோ!
உன்பு ருவ மையெடுத்து
என்னுருவம் வரைஞ்சிருச்சோ!
கண்ணு படப் போகுதுண்ணு
கையலம்பி அழிச்சிரிச்சோ
பின்னும் மனசு தானே--எழுதி
உன்னுள்ளே பதிஞ்சிரிச்சோ!
கண்ணு படப் போகுதுண்ணு
கையலம்பி அழிச்சிரிச்சோ
பின்னும் மனசு தானே--எழுதி
உன்னுள்ளே பதிஞ்சிரிச்சோ!
மச்சான் இருப்
பேன்னு
மறச்சு சாக்குச்
சொல்லி நீ
தண்ணிக் குடம்
இடுக்கி
தண்ணி யோட சிறுக்கி நீ
தண்ணிக்குப்போறேன்னு
கன்னி நீ வந்தயின்னா
எண்ணிச் சிரிப்பாரடி--அதில்
என்னை இழுப்பாரடி.
தண்ணிக்குப்போறேன்னு
கன்னி நீ வந்தயின்னா
எண்ணிச் சிரிப்பாரடி--அதில்
என்னை இழுப்பாரடி.
எனக்கும் மீச அரும்பலயோ!
உனக்கும் ஆச புரியலயே !
உனக்கும் ஆச புரியலயே !
பின்ன என்ன இழுக்குதடி
என்ன அது காந்தமடி!
தின்னத் தான துடிக்குதடி
சித் தெறும்பு
கடிக்குதடி.
என்ன நானும் சொல்வனடி-மனசு
என்னென் னமோ பண்ணுதடி.
கானக் கருங் குயிலே!
மானே அருங் கிளியே!
தேனே தீங் கனியே!
திகட்டாத செங்
கரும்பே!
பேசா மப் போனயின்னா
தாங்காது மனசு மீனா!
கூசாதடி நீயும் வீணா!--முத்தம்
கொடுப்பதாரு நானா நீனா?
அன்னம் போல் நட நடந்து
என்ன நீ கட கடந்து
சின்னச் சிரிப்
புதிர்ந்து
மின்னும் மனம் புரிந்து.
மருகியுன்ன நானும் தேடி
உருகு றேனே மானே வாடி!
நின்னு ஒன்னு சொல்வாயடி --இல்ல
கொன்னு மண்ணு தள்வாயடி.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment