ஆட்டமும்
ஓட்டமும்
என்ன
இது வாழ்க்கையடா!
எதற்கு
இங்கு வாழ்வோமடா!
என்ன
கொண்டு வந்தோமடா!
என்ன
கொண்டு போவோமடா!
சுற்றுலா போன்ற மையமடா!
சொந்தமில்லை
பூமியடா!
உற்றதெல்லாம்
உதறியடா!
ஒரு
நாளில் உயிரும் செல்லுமடா!
கூடி
வரும் கூட்டமடா!
கூட
யாரு வருவாரடா!
யாரு
இங்கு சொந்தமடா!
பேரும் மறந்து போகுமடா!
ஐம்புல்ன்கள் தானே தொல்லையடா!
அடங்கிய பின்னே இல்லையடா!
வம்பும் வாதமும் வேண்டாமடா!
கொம்பன் என்ன
பட்டமடா!
ஆயுதங்கள் எதற்கு தேவையாடா!
ஓயும்போதது உதவுமோடா!
காற்று இருந்தால்
துள்ளுமடா!
காலியானால்
குப்பையடா!
வயிறும் ஊட்டமும் ஓட்டமடா!
கயிறிலாடும்
ஆட்டமடா!
ஆட்டம்
ஓட்டம் நிற்குமடா!
நீட்டிய சடலம் நீர்குமடா!
எண்ணிப்பாரு
கொஞ்சமடா!
எத்தனை
நாள் தஞ்சமடா!
ஒன்னுமில்லை
வாழக்கையடா!
விண்ணும்
மண்ணும் சிரிக்குதடா!
கொ.பெ.பி.அய்யா.
1
No comments:
Post a Comment