Thursday, 19 December 2013

செவிகள் இல்லையா?


ஆதரிக்க ஆளில்லை!

என்ன இது!
எவ்வளவு நேரமாகக்
குழந்தை அழுகிறது!
அதற்கு-
ஆதரவு  காட்டி
அரவணைக்க ஆளில்லையோ!

குரல் கொடுத்தேன்--
பதிலில்லை.
தட்டிப் பார்த்தேன்
தாழிடவும்  இல்லை.
தானாகவேத் திறந்தது.
எட்டிப் பார்க்கவும் தயக்கம்-
இருந்தாலும் ஒஞ்சியே
இடுக்கலின் ஒடுக்கிலே
இலகுவாகப் பார்த்தேன்-

அய்யய்யோ................
என்ன கொடுமை !!!
அந்தக் காட்சியைக் காண
நானென்ன பாவம் செய்தேன்!
பதிறியே கதவைப்
படீரெனத் தள்ளியே
நுழைந்து விட்டேன் உள்ளேயே!
.
பாலுக்காக அழவில்லை
பசிக்காகவே அழுதது.
தாயவள் காய்ச்சலால்
சாய்ந்து கிடக்கிறாள்.
அவளது உடல் வீசும்
அனலோ குழந்தைக்கு
ஒப்பாமல் முகம் வேர்க்கிறதே!

 உடல் நனைகிறது.
அதற்குந் துணிந்தே
அன்னையின் மார்பை  
அதுவே விலக்குகிறது..
ஆவி ஆவிக் குடிக்கிறது
ஆனாலும் அழுகிறதே......
பசிதான் அட்ங்கலையோ!

பசிதீர்ந்த பின்னுங்கூடப்
பாசத்திற்கு அழுகிறதோ!..
அப்பனோ அலுவலுக்குச்
சென்று விட்டான்.
அப்பனைப் பெற்றவர்களையும்-
அனாதை இல்லம்-
சேர்த்து விட்டார்கள்.
.
பாவம் அந்தக்
குழந்தை!அதைப்-
பார்ததுக் கொள்ள யாருண்டு?
பெற்றவளைப் பற்றிய நோய்...
வைரசுத் தாக்கமென்றால்--
தொற்றுமே குழந்தைக்கும்!
என்ன நான் செய்யட்டும்!

என்னால் முடிந்ததோ.......!
இருவரையும் மருத்துவமனை
சேர்த்து விட்டேன்.
அவ்வளவுதான்.
அப்புறம் ஆண்டவனும்
துணை செய்வானோ!
முதியோரைப் பாரமென
ஒதுக்குவோர்க்கெல்லாம்.......
கதியிதுதான் காணுவீர்!

கொ.பெ.பி.அய்யா,





No comments:

Post a Comment