Saturday, 21 December 2013

கவிஞனும் பாரிதான்

நானுங்கூடப்பாரிதான்!!

பாடிப்பாடிப் பழகினேன்
பாடாதிருக்க முடியல!..
தேடித்தேடிக் கண்டதை
மூடிமறைக்கத் தெரியல!

வாரி வாரி வழங்குறேன்,
வள்ளலாக இருக்கிறேன்.
பேனாவைத்தான் திறக்கிறேன்.
தானா எடுத்துக் கொடுக்குறேன்.

காலணாவும் சம்பாதிக்க
வேலை இல்லையோ!
கண்டபடி பேசுறாளே
மனைவி வீட்டிலே!

தேரையே தந்தானே
பாரி வள்ளல் முல்லைக்கு!
என்னையே தந்தேனே
நானுந்தானே தமிழுக்கு!

கொ.பெ.பி.அய்யா



No comments:

Post a Comment