மலர்கள்
செய்த பாக்கியம்
கொடியில்
பூத்த இந்தப் புதுமலர்கள்
விடியல்
கண்டாடுகின்றன!
இன்னும்
சில மணித்துளிகளில்
மண்ணில்
உதிர்வதையும்
மறந்தே
சிரிக்கின்றன---ஆனால்
இப்போதுவரை
அது தன்
தாயின்
மடியிலேயே துயில்கின்றன!
தொட்டியில்
விழும்
குழந்தைகள்
மட்டும் ஏன்
பிறக்கும்
போதே அனாதைகளாகின்றன!
மலர்கள்
செய்த பாக்யமென்ன?
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment