கனவுகளும்
சுகமானதே!
நினைவுகள் அழைத்து வரும் தேவதைகளாம்
கனவுகளை விரட்டிவிடாதீர்கள்.
காதல்
மனைவி கனவில் வருவதும்
காதல் இரகசியம் அல்ல.
காதல் இரகசியம் அல்ல.
காதல் வலிமை நினைவில் வளர்வதும்
காதல் அதிசயம் அல்ல.
நினைக்கும் அவசியம் நித்தியம் எதற்கு?
கனவின் இரகசியம் நிச்சயம் அதற்கு.
நினைவின் எழுச்சி கனவின் முதிற்சி
கனவின் வளர்ச்சி நினைவின் பயிற்சி.
கனவுகள் தானே தோன்றுவதில்லை
நினைவுகள் தானும் தூங்குவதில்லை.
நிசத்தின் நினைவுகள் பதிவுகள் தானே
அசத்திய உறக்கத்தில் கனவுகள் தானே.
அமைந்த காதல் அன்பின் தோட்டம்.
அன்பின்
பூக்கள் ஆனந்த சுகந்தம் வீசி
காதல்
தேனை கனவில் கசியவிடுகின்றன.
வாயை
மொச்சுக்கூட்டிய வண்ணம்
வக்கணையாக
நினைவுகளை அசைபோட்டு
கனவுகளை
சுகமாக சுவையுங்கள்.
அவசரப்பட்டு
தூக்கம் கலைத்து
கனவுகளை
விரட்டிவிடாதீர்கள்.
நிகழ்சுவுகளும் நினைவுகளும் நலமானால்
கனவுகளும் சுகமானதே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment