முடிவைத்தேடி............!!!!
சொந்தங்களை எங்கேயடா?
பந்தங்களும் எங்கேயடா?
முதுமைகூட வறுமையடா!
ஒதுங்குதெல்லாம் ஓரமடா!
உற்றதுணை பறந்ததடா!
பெற்றதுகள் மறந்ததடா!
சுற்றமுந் தொலைஞ்சதடா!
முற்றமுங் கலைஞ்சதடா!
நீரும் வற்றி ஓஞ்சதடா!
சேறும் ஒட்டிக் காஞ்சதடா!
தேருழுத்துச் சாஞ்சதடா!
சேரும் நாளுந் நோங்குதடா!
கண்ணுங்கெட்டு மறையுதடா!
காதும்பட்டுக் குறையுதடா!
ஒண்ணுக் கொண்ணு அடங்கலடா!
ஓஞ்சு எல்லாம் தடங்கலடா!
தென்னைமரம் நிற்குதடா!
என்னை உயிர் காக்குதடா!
முன்னை செஞ்ச நன்றியடா!
பின்னைப் பலன் காட்டுதடா!
புன்னை மரம் பார்க்குதடா!
திண்ணைக் காற்று வீசுதடா!
புண்ணை ஆற்றி ஊதுதடா!
என்னை நன்றி சொல்லுதடா!
நாயுமொண்ணு சுத்துதடா!
நல்லசோறும் இல்லையடா!
பேய ஓட்டக் கத்துதடா!
பேயலையும் செத்தூரடா!
வற்றிவிட்ட வாடலடா!
கெட்டழுகும் சடலமடா!
இறைவா இது கொடுமையடா!
விரைவா என்னைக் கூப்பிடடா!
கொ.பெ.பி.அய்யா.
சொந்தங்களை எங்கேயடா?
பந்தங்களும் எங்கேயடா?
முதுமைகூட வறுமையடா!
ஒதுங்குதெல்லாம் ஓரமடா!
உற்றதுணை பறந்ததடா!
பெற்றதுகள் மறந்ததடா!
சுற்றமுந் தொலைஞ்சதடா!
முற்றமுங் கலைஞ்சதடா!
நீரும் வற்றி ஓஞ்சதடா!
சேறும் ஒட்டிக் காஞ்சதடா!
தேருழுத்துச் சாஞ்சதடா!
சேரும் நாளுந் நோங்குதடா!
கண்ணுங்கெட்டு மறையுதடா!
காதும்பட்டுக் குறையுதடா!
ஒண்ணுக் கொண்ணு அடங்கலடா!
ஓஞ்சு எல்லாம் தடங்கலடா!
தென்னைமரம் நிற்குதடா!
என்னை உயிர் காக்குதடா!
முன்னை செஞ்ச நன்றியடா!
பின்னைப் பலன் காட்டுதடா!
புன்னை மரம் பார்க்குதடா!
திண்ணைக் காற்று வீசுதடா!
புண்ணை ஆற்றி ஊதுதடா!
என்னை நன்றி சொல்லுதடா!
நாயுமொண்ணு சுத்துதடா!
நல்லசோறும் இல்லையடா!
பேய ஓட்டக் கத்துதடா!
பேயலையும் செத்தூரடா!
வற்றிவிட்ட வாடலடா!
கெட்டழுகும் சடலமடா!
இறைவா இது கொடுமையடா!
விரைவா என்னைக் கூப்பிடடா!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment