பாதி உண்மை
பாதி உண்மை ஒப்புதலை
பாவி நீ உளறினாய்.
மீதியும் கூறச் செய்யும்--ஐ.நா
மன்றம் உன்னை விடாது...
ஐ.நா.சபைத் தீருமானம்
ஆதரவும் விரியுது.
அகிலமே உனைக் கேட்க-ஒன்றி
ஆர்பபரித்து எழுகுது.
கொத்துக் கொத்தாய் கொன்றவனே!
கொலை கார வெறியனே.!!
பார்க்கப் பார்க்க பாலகனை--பாவி!!
பதைக்கப் பதைக்கச் சுட்டதேனோ!
நீதி யுன்னை விடுமோடா!!
நீசனே நில்லடா...
போர்க் குற்றவாளி நீ--உனக்குப்
பிடி வாரன்டும் வந்ததடா...
விலங் குனக்கு விலங்கிட்டு
விழ விழவே காலுதைத்து
வீதி வலமாய் கரகரவென-உனை
இழுத்துப் போவர் சண்டாளா..!!
காரிக் காரி உமிழ்ந்திடுவர்..
காண் போரெல்லாம் இடித்திடுவர்..
தூக்கு மேடை உறுதியடா.--இது
காலம் எழுதும் தீர்ப்படா..
கொ.பெ.பி.அய்யா
No comments:
Post a Comment