பலசரக்கு.
உருகி
மெழுகு உதவுகிறது.
கருகித்திரியும் எரிகிறது.
ஒளியும் அதனால் வளர்கிறது
மெழுகும் திரியும் கரைகிறது--தீயும்
தீர்த்தும் விலகி மறைகிறது
தீர்த்தும் விலகி மறைகிறது
பிள்ளையும் அதுபோல் உருக்குலைத்து
பெற்றவரை மறந்தும் விரைகிறது.
வேருதான்
வளர்த்ததென்றும்
விவரம்
மலரும் அறியாதா?
பூத்ததும்
மறக்குமோ!
வளர்த்தாரைத்
துறக்குமோ!
வண்டினைக்
கண்டதும்
வேரை மறந்தும் பறக்குமோ!
பிரசவிக்கும்
வலியதை
புருசனுக்கும்
ஒளிப்பாளே!
பிள்ளையைக்
கண்டதும்
வலியெல்லாம்
மறப்பாளே!
வலியின்றிப்
பெருமைகள்
வாய்க்குமோ
தாய்மைக்கு!
வலியதனைச்
சிலைசொன்னால்
உளியதனைச்செதுக்குமோ!-அழகு
சிலையும் கலையாக மிளிருமோ!
துணியும் அலை மீண்டும்தான்
முனையுமா?
தோற்கும்
நிலை தேறவும்தான்
துணியுமா?
கரையதனைத்
தொட்டுத் தொட்டும்
வரைமீறிப் போகுமோ !
வளரவும் விசை கூட்டி
கரையையும் தாவுமோ!
எழுத்துமட்டும்
கோர்த்துவிட்டால்
வரிகளாகுமா?
வரிகள்
வெறும் வரிசையானால்
கவிதையாகுமா?
பிறக்காத
கவிதை என்ன
பேச
விழையுமோ!
உருக்கி
அது அழுது என்ன
உணர்த்தி
விளையுமோ!
அர்த்தமற்றப்
படைப்புக்களும்
ஆக்கவில்லையா?
அதையும்கூடத்
தமிழ் திருத்தி
ஏற்கவில்லையா?
மனிதனல்லா
விலங்குகளைத்
தாங்கும்
பூமிக்கோ!
மனிதமற்ற
மனிதனென்ன
மகா
சுமையோ!
அவ்வப்போது
சினமெடுக்கும்
இயற்கைப்
பாடமோ!
திருந்த
மனிதன் பூமியாடும்
திருவிளை
யாட்டோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment