Thursday, 19 December 2013

சின்னப் பெணாணே!

சின்னப்பொண்ணே !
-------------சேதி கேளு!

சின்னப்பொண்ணே!சின்னப்பொண்ணே!
சேதி கேளம்மா----உந்தன்
அன்னை பேச்சைக் கேட்டு வளர்ந்து
அருமை கொள்ளனும்------அம்மா
பெருமையடையனும்-----நீயும்
வளமை ஆகனும்.

காலம் மிகவும் கெட்டுப்  போச்சு
கருத்தில் கொள்ளனும்-----அழகுக்
கோலம் போன்றே உன்னைக் காக்க
தெரிந்து கொள்ளனும்-----நீயும்
புரிந்து நடக்கனும்------பக்கம்
அறிந்து பழகனும்.

பெண்ணினந் திண்ணும் பேயலையும்
பார்தது விலகனும் ---எவரும்
அறியா மனிதர் அருகே வந்தால்
சரியா பேசி நெருங்காமல்----விட்டு
ஒதுங்கிப் போகனும்----பாப்பா
உசார் ஆகனும்

பள்ளி வீடு இரண்டுந்தவிர வேறெங்குமே
உற்றாரன்றி உறவென்று நம்பி
மற்றாருடனும் செல்லாதே----- எவரும்
திண்ணும் பண்டம் தந்திட்டாலும்
கண்டிட வேண்டாமே -----உடனே
அகன்று செல்லனுமே.


கொ.பெ.பி.அய்யா





No comments:

Post a Comment