அப்பாவின் அருமை.
அப்பாவின் அருமை புரியும்
அப்பாவின் அருமை புரியும்
அம்மாவின்
பெருமைச் சிரிப்பில்
சுப்பனின்
திருமை தெரியும்--நல்ல
அப்பனின்
பொறுமை வளர்பபில்.
காலமெல்லாம்
கற்பனையில்
கோலமாய்க்
கொண்டவனில்.
சீலமாய்
அவள் தயவில்--உயிர்த்தான்
வாலறிவன்
வேண்டித்தனில்.
பின்
வாழும் உலகினுக்கு
தன் பேரு விளங்குதற்கு நன்மகவு
பெறுவதற்கு--நல்லாளை
தான்
மணந்தான் வாழுதற்கு.
கருவறையிற்
சுமந்தாளை
கனவோடு
அணைந்தானை
உருவாக
விதைத்தானை--போற்றுப்
பிரம்மனே
அவன்தானை.
நாளெல்லாம்
உழைத்திட்டான்.
தான்
வாழ மறந்திட்டான்..
வாழ்வாக மகவைக கண்டான்--வாரிசே
வளர்நதிட
வாழ்ந்திட்டான்.
பையதைச்
சுமந்திட்டான்.
படிப்பினைத்
தந்திட்டான்.
வையத்தில்
உயர்த்திட்டான்--பிள்ளை
வளர்ச்சியில்
நிறைந்திட்டான்.
உலகினை
உணர்த்தினான்.
பழகிடப்
பழக்கினான்.
விலக்கிட
வேண்டாமை---தனையே
நிலையாக்கிச்
செலுத்தினான்.
ஆதாரங்
காட்டினான்.
அறிவொளி
ஏற்றினான்
சேதாரம்
இல்லாத--உயரச்
செயல்
முறை ஊட்டினான்
ஆன்றோரே
சூழ்ந்திருக்க
அவை
முந்தி மகனிருக்க
ஈன்றாரைப்
பிறர் வியக்க--மகிழ்ந்திட்டான்
சான்றோனாய் நிலம் மதிக்க.
கையிரண்டைப்
பற்றியே
மெய்தழுவ
அணைத்துமே
செய்நன்றி
செய்வனென்றே--தந்தை
சேவடித்
தொழுதுதிர்த்தான்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment