கவி பழகுவீர்!
கவி பழகுவீர் கண்மணிகளே!
கவி பழகுவீர்!
புவி அழகுப் பூக்களே!
கவி பகுவீர்!
பாரதி கற்றுத்தந்த
பழகு தமிழ் புதுக்கவிதை
கூறது மொழி வழியே
கூசாது பழகுவீர்!
சேதியைச் சிங்காரித்து
சிறு வரிகள் செய்குவீர்!
ஆதியை அஞ்சாது
அறிந்த நடை பழகுவீர்!
புத்தம் புது மொட்டுக்களே!
நித்தம் நித்தம் மலருவீர்!
வித்தை அது கவி பாட
தத்தித் தத்திப் பழகுவீர்!
நினைத்தைக் கிள்ளுவீர்!
நேர்த்தியாய் சொல்லுவீர்!
பொருந்துவது இணை பார்த்து
புனைந்திடப் பழகுவீர்!
இசைகின்ற சொல் பாடும்
இசையினிக்கும் கவி ராகம்.
ரசனைக்கு சொல் தேடும்
வசமாகும் கவி யோகம்.
பூவான சொல் தேர்ந்து
நோவாது பொருள் கோர்த்து
அலங்கார நயம் சேர்த்து
ஆக்குவீர் கவி மாலை!
அவசரம் கொள்ள வேண்டாம்
ஆழம் கணடு தேடுவீர்!
தவம் பெறும் ஞானமாம்
கவிதையது பழகுவீர்!
படைத்ததைச் சொல்லுமுன்
பலமுறை சரி ஆய்ந்து
விடை பகர வினாக் கண்டும்
விளங்கும் கவி பழகுவீர்!
முக்காலக் கவிஞர்களின்
சொக்கும் கவிச் சுந்தரங்கள்
கற்கண்டாய் சுவைத்துக்கொண்டு
கவி வரையப் பழகுவீர்!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment