அய்யோ பாவம்!!
கானாப்பாட்டுத்தானா--சும்மா
கலக்குறேனா நானா!!
வீணாப்போனேந்தானா!--அடியே
வெளியே வாயேன் மீனா!
கோயம் பேடு சந்தை-அங்கு
கூடுது மாடு மந்தை!
மனசு மேயுது சேர்ந்தே-தினம்
வாடுது உன்னச் சுமந்தே!
கூவம் நதியும் மணக்கும்--நீ
குங்குமங் கரைச்சா சிவக்கும்!
பாவந் தீரும் குளிச்சா- உன்
பாவாடை துவச்சி நனைஞ்சா.
நிறைஞ்சி ஓடுது சேறு-நித்ய
ஜீவ அடையாறு!
சாக்கடைப் போக்குச் சாவாறு--என்
போக்கடை இதுவா வெளியேறு!.
கொடுங்கை யூரு குப்பை--ஊரு
குடலப்புரட்டுது கப்பே!
படுத்தேன் இங்கே இப்பே--ஒரு
பாட்டும் பாடடி ஒப்பே!
அய்யோ பாவம் தானானேன்--இன்று
மெய்யாக் கூவம் நானானேன்!
பொய்யே போதை சுகமே---மீனா
செய்யுங்காதல் நிசமோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment