யாருக்குச்சுதந்திரம்?
யாருக்குச் சுதந்திரம்-
யாருக்குச் சுதந்திரம்?
ஊருக்குள் கேட்டேன்
இல்லை இல்லை
ஊமைகளிடம்தான் கேட்டேன்
அவர்கள் பாவம்
விடைசொல்லத் தெரியவில்லை!
அதனால் அந்தக் கொள்ளையன்
வெள்ளையனிடமே கேட்டேன்.
அவன் சொன்னான்,
"காந்திக்குப் பயந்துதான்
சுதந்திரம் கொடுத்தோம்
அதனால்தான் சுதந்திரமும்
அஞ்சுகிறது அதிகாரம் கண்டு."
உறக்கத்தில் கொடுத்தான் சுதந்திரம்.
அதனால்தான் நாடு இன்னும்
தெளியவே இல்லை.!
அன்று அவன் விதைத்த குண்டுகள்
இன்றும் வெடித்துக் கொண்டுதான்
இருக்கின்றன சுதந்திரபூமியில்.
கொள்கைகள் குண்டுகளால்தான்
பேசப்படுகின்றன சுதந்திர நாட்டில்.
அந்நியன் அன்று நம்மை அடித்தான்.
இன்று நாமே நம்மை அடித்துக்கொள்கிறோம்.
அவன் விதைத்த விதைகள்
இன்னமும் மடியவே இல்லை.
தீவிரவாதங்களாய் சுதந்திரமாய்
திரும்பத்திரும்ப முளைக்கின்றன.
தீவிரவாதங்களாய் சுதந்திரமாய்
திரும்பத்திரும்ப முளைக்கின்றன.
சமயங்களால் பேதங்கள்,
சாதிகளால் வேற்றுமைகள்,
மொழிகளால் மாச்சர்யங்கள்.
இவைகள்தான் நம்க்கு உரிமைகளாய்
அவன் வைத்துப் போன சூன்யங்கள்.
உயிர்களை விதைத்து
உதிரத்தால் பாத்திகட்டி
வளரத்த சுதந்தரப் பயிரின்று
வாடிக்கருகி வதங்கி
நச்சுப் புகையில் மூழ்கி
மூச்சுவிடத் திணறுகிறது பாவம்!
இது கண்டு நாமும்
வருந்துவோமா-வருந்தித்தான்
திருந்துவோமா?
செல்வங்களை எல்லாம் பாவி
கொள்ளையடித்த வெள்ளையன்
வறுமையை மட்டும் நமக்கு
வைத்துவிட்டுப் போனான்.
வளங்களை எல்லாம் அவன்
வாரிக்கொண்டா போனான்?
இழப்பைச்சரி செய்து
இந்தியாவை ஆக்குமுன்
தந்தை மகாத்மாவை சண்டாளன்
அந்திமம் ஆக்கிவிட்டானே!
இந்தியாவை வளமாக உருவாக்கும்
மந்திரத்தைத் தொலைத்துவிட்டோம்!
பந்தி விரித்தன தொந்திப் பேய்கள்.
மிஞ்சிய கொஞ்சமும் கபளிகரமாகிறது.
வறுமை சாகவில்லை !
வறுமையை பேசினார்கள்!
வறுமை ஓட்டும் திட்டமெல்லாம்
கருப்பாடுகள் மேய்கின்றன,!
தெருவெல்லாம் கட்சிகளே
விளையாடி ஊளையிடுகின்றன!
சுதந்திர இந்தியாவில் இன்று
சுரண்டலுக்குத்தான் பூரண சுதந்திரம்.
கட்சிகளுக்கும் பஞ்சமில்லை.
வெக்கமஞ்சும் நெஞ்சமில்லை.
சுதந்திர இந்தியாவில் இன்று
சுரண்டலுக்குத்தான் பூரண சுதந்திரம்.
கட்சிகளுக்கும் பஞ்சமில்லை.
வெக்கமஞ்சும் நெஞ்சமில்லை.
வாரிச் சென்றான் அந்நியன்!
மாறிக்கொண்டான் இந்தியன்,
அன்று அவன் கொள்ளை.
இன்று இவன் கொள்ளை.
பாவம் சாமான்யன்.
மாறிக்கொண்டான் இந்தியன்,
அன்று அவன் கொள்ளை.
இன்று இவன் கொள்ளை.
பாவம் சாமான்யன்.
வாரிசாட்சிக்கே இன்னும்
வகை செய்கிறர் சூதகர்.
மாறும் சூழலுக்கு என்றும்
மார்க்கம் கண்டும் பயனில்லையோ!
மாறும் சூழலுக்கு என்றும்
மார்க்கம் கண்டும் பயனில்லையோ!
மீண்டும் அடிமைப்படவே
ஆண்டுமாறிதான் இந்தியன்.
வாரிசு அரசியல்கள் பூக்கவே
வறுமை இங்கே வாழ்கிறதோ!
வளர்ந்து கொண்டேதான் மெலிகிறோம்.
வளர்ந்தார் முன் கெஞ்சுகிறோம்.
உள்ளரிக்கும் வைரஸ்கள்
செல்லரித்து சிதைக்கின்றன.
சரியான மருந்துதான்
அறிவதும் எந்நாளோ?
வளர்ந்து கொண்டேதான் மெலிகிறோம்.
வளர்ந்தார் முன் கெஞ்சுகிறோம்.
உள்ளரிக்கும் வைரஸ்கள்
செல்லரித்து சிதைக்கின்றன.
சரியான மருந்துதான்
அறிவதும் எந்நாளோ?
வறுமைக்குள் தள்ளப்பட்ட
ஜப்பான் தலைதூக்கவில்லையா?
ஒன்றுபட்டு உழைத்தார்கள்
உயர்ந்தார்கள்.
ஆனால் நாம் மட்டும்
ஆக்கம் கெடும் சாதிமத பேதங்களையே
ஆதாரமாய் காக்கிறோம்.
ஆனால் நாம் மட்டும்
ஆக்கம் கெடும் சாதிமத பேதங்களையே
ஆதாரமாய் காக்கிறோம்.
பேதங்களுக்கும் வேற்றுமைகளுக்கும்
மாச்சயர்ங்களுக்குமா சுதந்திரம்?
அவைகளால் பசி போனதா?
வறுமை ஒழிந்ததா?வல்லரசானதா?
பாதுகாப்புச் செலவினமாக
பல்லாயிரம் கோடிகள்
நமக்குள் நாமே ஒன்றுபட்டால்
நமக்குள் எதற்கு பாதுகாப்பு?
இந்தியனுக்கு இந்தியன்
தண்ணீர் தர மறுக்கிறார்கள்.
அந்நியன் பென்னிக்கேன்
அக்கறையோ!
அந்நியன் பென்னிக்கேன்
அக்கறையோ!
இந்தியாவின் சொத்துக்கள்
இந்தியர்க்கெல்லாம் பொதுதானே.
இந்தியன் என்ற சொல்லுக்கு?
என்னதான் பொருள்?
இன்னும் எல்லைகள் அழிக்கப்படவில்லையானால்
இந்திய ஒன்றியம் எதற்கு?
நதிகளைக் கட்டிப்போட
அதிகாரம் பெற்றவன் எவன்?
கடலில் கொட்டும் நீரை
வயலில் நனைக்க விட்டால் என்ன?
என்னதான் பொருள்?
இன்னும் எல்லைகள் அழிக்கப்படவில்லையானால்
இந்திய ஒன்றியம் எதற்கு?
நதிகளைக் கட்டிப்போட
அதிகாரம் பெற்றவன் எவன்?
கடலில் கொட்டும் நீரை
வயலில் நனைக்க விட்டால் என்ன?
நீதிமன்றங்களை அவமதிக்கவும்
நீளுகிறதா சுதந்திரம்?
ஓட்டுப்போடத்தான் சுதந்திரம்
ஓட்டுக்குப் பணம் தரவா சுதந்திரம்?
ஊழியம் செய்யச் சுதந்திரம்
ஊழல் செய்யவா சுதந்திரம்?
காதல் செய்யச் சுதந்திரம்
கற்பழிக்கவா சுதநிரம்?
சொத்து வாங்கச் சுதந்திரம்.
சுரண்ட இல்லை சுதந்திரம்.
யாருக்குச் சுதந்திரம்?
ஊருக்குச் சொல்லுங்கள்.
சமத்துவ இந்தியாவை
சமைக்கவே சுதந்திரம்
ஒன்றுபட்டு வாழுவோம்
உயரத்துவோம் இந்தியாவை.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment