தேடுகிறான்........................!
வரிகளைத் தொலைத்து விட்டு
வார்ததைகளைத் தேடுகிறான்.
மொழியினைத் தொலைத்துவிட்டு
முகவுரை தேடுகிறான்.
வழிகளைத் தொலைத்துவிட்டு
வாசலைத் தேடுகிறான்.
நெறிகளைத் தொலைத்துவிட்டு
நிம்மதி தேடுகிறான்.
வரவினைத் தொலைத்துவிட்டு
வாழ்வினைத் தேடுகிறான்.
மரபினைத் தொலைத்துவிட்டு
மாண்பினைத் தேடுகிறான்.
பண்பினைத் தொலைத்துவிட்டு
அன்பினைத் தேடுகிறான்.
பரிவினைத் தொலைத்துவிட்டு
பாசத்தை தேடுகிறான்.
ஒழுக்கத்தைத் தொலைத்துவிட்டு
உறவினைத் தேடுகிறான்.
மனிதனைத் தொலைத்துவிட்டு
மரியாதை தேடுகிறான்.
கற்றதைத் தொலைத்துவிட்டு
மற்றதைத் தேடுகிறான்
உற்றதைத் தொலைத்துவிட்டு
உணவுக்குத் தேடுகிறான்.
காதலைத் தொலைத்துவிட்டு
கண்ணீரைத் தேடுகிறான்.
கண்ணுறக்கம் தொலைத்துவிட்டு
கனவினைத் தேடுகிறான்
மனதினைத் தொலைத்துவிட்டு
மதுவினைத் தேடுகிறான்.
உடலினைத் தொலைத்துவிட்டு
உயிரினைத் தேடுகிறான்.
பக்தியை தொலைத்துவிட்டு
முக்தியை தேடுகிறான்.
இதயத்தை தொலைத்துவிட்டு
இறைவனைத் தேடுகிறான்.
புத்தியை தொலைத்துவிட்டு
போதையில் தேடுகிறான்.
சக்தியை தொலைத்தவிட்டு
சடலத்தில் தேடுகிறான்.
கொ.பெ.பி.அய்யா
வரிகளைத் தொலைத்து விட்டு
வார்ததைகளைத் தேடுகிறான்.
மொழியினைத் தொலைத்துவிட்டு
முகவுரை தேடுகிறான்.
வழிகளைத் தொலைத்துவிட்டு
வாசலைத் தேடுகிறான்.
நெறிகளைத் தொலைத்துவிட்டு
நிம்மதி தேடுகிறான்.
வரவினைத் தொலைத்துவிட்டு
வாழ்வினைத் தேடுகிறான்.
மரபினைத் தொலைத்துவிட்டு
மாண்பினைத் தேடுகிறான்.
பண்பினைத் தொலைத்துவிட்டு
அன்பினைத் தேடுகிறான்.
பரிவினைத் தொலைத்துவிட்டு
பாசத்தை தேடுகிறான்.
ஒழுக்கத்தைத் தொலைத்துவிட்டு
உறவினைத் தேடுகிறான்.
மனிதனைத் தொலைத்துவிட்டு
மரியாதை தேடுகிறான்.
கற்றதைத் தொலைத்துவிட்டு
மற்றதைத் தேடுகிறான்
உற்றதைத் தொலைத்துவிட்டு
உணவுக்குத் தேடுகிறான்.
காதலைத் தொலைத்துவிட்டு
கண்ணீரைத் தேடுகிறான்.
கண்ணுறக்கம் தொலைத்துவிட்டு
கனவினைத் தேடுகிறான்
மனதினைத் தொலைத்துவிட்டு
மதுவினைத் தேடுகிறான்.
உடலினைத் தொலைத்துவிட்டு
உயிரினைத் தேடுகிறான்.
பக்தியை தொலைத்துவிட்டு
முக்தியை தேடுகிறான்.
இதயத்தை தொலைத்துவிட்டு
இறைவனைத் தேடுகிறான்.
புத்தியை தொலைத்துவிட்டு
போதையில் தேடுகிறான்.
சக்தியை தொலைத்தவிட்டு
சடலத்தில் தேடுகிறான்.
கொ.பெ.பி.அய்யா
No comments:
Post a Comment