ஒரு
குயிலின் குரல்.—பக்தி மாலை.
அண்டம் முதலோன் ஆகாய வினையன்
ஆளும்
பகவனைத் தேடு.
கற்றது பயனு மென்னவோ சொல்வமோ!
பெற்றது
போற்றா அறிவு.
உம்மில்
உளனாம் இறையை உணர்ந்தும்
துணிந்தும்
நலன்கள் பெறுக.
உயிர்களெல்
லாந்தன்னிற் கொண்டா னவனையே
தம்மில்
நினைந்துமே தேடு.
தீவினையாற் தீமையும் தீண்டா அரணாம்
திருவினை நோற்பார் சிறப்பு.
புலன்களாம்
ஐந்தும் கடந்தான் அவனையே
போற்றிட
வாழ்வாய் நலம்.
ஒப்பிலா தவன டியார்க்கு வறுமையும்
ஒண்டாப்
பிணியதும் ஓடும்.
புண்ணியக்
கடலாம் புகழடி போற்றின்
பெறுவதும்.பேறது
வீடும்.
தன்னிலை
யற்றத் தலையை வணங்காத்
தலையுந்
தலையோ ஆமாம்
பிறவி
மேலுந் தொடரா தொழியவே
பற்று இறையவன் தாள்.
கொ,பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment