கவிஞனும்
ஒரு தாய்தான்!
கவிஞன்
கவிதைக்
குழைந்தைகளை
பிரசவிக்கிறான்.
சில கவிதைகள்
சுபமாகவும்
சில கவிதைகள்
சிரமத்திலும்தான்
பிறக்கின்றன.............
ஆகவே
கவிஞனும் ஒரு
தாய்தான்.........................
அந்தப்
பிரசவ வேதனை
என்னென்பதும்
பெற்றவளறியும்
பேரின்பமே.......................!
பிள்ளை அவனதானாலும்
பிறர் போற்ற
மகிழும் தாய்தான்
கவிஞனும்........................!
அது
ஊருக்கு நல்லதானால்
உத்தமப் பிள்ளை..
பேருக்குப்
பிள்ளையானால்
யாருக்குத்தான்
இலாபம்..................................?
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment