Sunday, 22 December 2013

குட்டி சைகிள்......குழந்தைப்பாடல்.

குட்டிச் சைக்கிள்,,

குட்டிக் குட்டிச் சைக்கிளாம்..

குட்டி ஓட்டும் சைக்கிளாம்..

சுழட்டி மிதிக்கும் சைக்கிளாம்

சுழன்று ஓடும் சைக்கிளாம்.


மூன்று சக்கர வாகனம்.

முன்னும் பின்னும் போகலாம்.                                                                      

சாய்ந்திடாமல் குந்தலாம்.

பாய்ந்து சென்றும் முந்தலாம்.


வளைந்து வட்டம்  சுற்றலாம்.

வரைந்து கட்டம் சுட்டலாம்.

நெளிந்தும் நீண்டும்  ஓடலாம்.

ஒளிந்தும் கண்டும் ஆடலாம்.


உதவ யாரும் வேண்டாமே!

கதவும் மூடிக் கொண்டோமே!

வேறு வண்டி தொல்லையே

வீட்டுக்குள்ளே இல்லையே!


காற்று நிறப்பும் அவசியம்.
தோற்ற சிறப்பும் அதிசயம்.
ஓட்டும் சக்தி எண்ணெயும் 
ஊற்றும் பெட்டி இல்லையாம்.

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment