கனவு காணுவீர்!
கனவு காணுவீர்! கனவு காணுவீர்
புதிய பாரதம் கனவு காணுவீர்!
கலாமின் இளைஞர் காந்திய இந்தியாக் கனவு காணுவீர்!
விதியென வெம்பி வீணாகிக் கிடக்காமல்,
கனவு காணுவீர்! கனவு காணுவீர்!
உலகின் முதன்மை உன்னத இந்தியாக் கனவு காணுவீர்!
கலாமின் கனவு நினைவாகிடக் கனவு காணுவீர்.
ஊழல் ஓழிந்த உன்னத உலகைக் கனவு காணுவீர்.
ஆளுமை உண்மை ஆளும் நன்மை
அடையக் கனவு காணுவீர்.
மேலும் மனிதம் வாழும் புனிதம் கனவு காணுவீர்.
நாளும் புதுமை போலும் இளமை இந்தியாவைக் கனவு காணுவீர்
ஏழ்மை யில்லா உலகினைக் கனவு காணுவீர்!
இந்தியத் தலைமை ஏற்கு முலகைக்
கனவு காணுவீர்!
அறிவியல் மேலாண்மை இந்தியாவைக் கனவு காணுவீர்.
பாழ்மை யில்லாப் படைப்பு உலகைக் கனவு காணுவீர்!
இயற்கை வேளாண்மைக் கனவு காணுவீர்!
தரிசில்லாப் பசுமைப் பூமிக் கனவு காணுவீர்!
பசுமை யெங்கும் பரவிய நிலங்கள்
கனவு காணுவீர்!
நதிக ளெலாம் கைகோர்த் தோடிடக்
கனவு காணுவீர்!
வரண்ட பூமி வையம் காணாக் கனவு காணுவீர்.
பரந்த வயல்கள் பாரெங்கும் பரவக் கனவு காணுவீர்.
பகைமை அறியாப் பாச உலகைக்,
கனவு காணுவீர்!
சுயநலம் இல்லாச் சுற்றம் சூழக் கனவு காணுவீர்!
அச்சம் மறந்த உலகைக் காணக்
கனவு காணுவீர்!
வீடுவாசல் பூட்டிடா விடுதலை காண
கனவு காணுவீர்!
நடுச் சாமமும் பெண்கள் நடமாடிடக்
கனவு காணுவீர்!
நகைப் பணம் ஆசை ஒழியக் கனவு காணுவீர்!
விலைவாசி ஆளுமை விவசாயி ஆளக் கனவு காணுவீர்!
வேளாண்மைச் செருக்குத் தாளாண்மைக் கனவு காணுவீர்!
வேலையிலா அவலம் ஒழியக் கனவு காணுவீர்!
உழையாத் திருடர் உழைத்து வாழக்
கனவு காணுவீர்!
இலவசச் சலுகை ஏங்காச் சமூகம் கனவு காணுவீர்!
விலையில்லா ஓட்டு விளங்கும் அரசியல் கனவு காணுவீர்!
பிச்சைக்கு அலைந்திடும் பாவம் ஒழியக் கனவு காணுவீர்!
நடைபாதைக் குடும்பம் நாடறியா
உண்மைக் கனவு காணுவீர்!
சமாதானம் சமத்துவம் உலகைக்
கனவு காணுவீர்!
சாதி மதப் பேதம் ஓழியக் கனவு காணுவீர்!
அந்நியம் மறந்த ஒன்றியம் உலகை
கனவு காணுவீர்!
எல்லோ ரெல்லாம் பெற்றோ மென
கனவு காணுவீர்!
பாலியல் வன்கொடுமை வேறோ டழியக் கனவு காணுவீர்!
கொலைக் களவுக் கொடுமைக் குற்றம் நீங்கக் கனவு காணுவீர்!
தனியொரு மனிதர்கும் உணவிலா வறுமை ஒழியக் கனவு காணுவீர்!
பிணி யில்லா உலகம் பேறாய்க் காண கனவு காணுவீர்!
வானங் கீழேவாழும் உயிர்கள் யாவும் உறவெனக் கனவு காணுவீர்!
நல்லோர் வல்லோர் நாடாளும் உண்மை கனவு காணுவீர்!
காந்தி காமராசர் கக்கன் போன்ற
கடவுள்கள் ஆளக் கனவு காணுவீர்!
இளைய பாரதம் இதுவே சமயம்.
இப்போதே கண் விழியுங்கள்.
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment