அச்சம் வேணாம் மச்சானே!
வச்சுச் செய்யி கொரனாவ!.
துச்சம் அதை ஓட்டிடலாம்.
கொஞ்ச நாளே விலகி இரு.
தொட்டாத்தான் ஒட்டிக்கொள்ளும்
தொற்று இது எட்டி நில்லு.
இருவாரம் கெடு இருக்கு
அதுவரைக்கும் விலகி இரு.
பயம் எதுக்கு பாத்திடலாம்.
தயங்காதே தனியே இரு.
நாட்டுக்காக நல்லதுனா
வீட்டுக்குள்ளே விலகி இரு.
தப்பான சோதனையாம்.
தப்பி வந்த கொரனாவாம்.
விட்டவன வச்சு செய்வோம்.
வீரன் நீ விலகி இரு.
மச்சானே! மச்சானே!
மனசுக்குள்ளே வச்சிருக்கேன்.
மொத்தமா ஆசையெல்லாம்
சேத்து வச்சுக் காத்திருக்கேன்.
மடை திறந்த வெள்ளம் போல
தடைவிலக விலகி இரு.
தம்முயிர் கருதாமல்,
நம்முயிர் காப்பவர்கள்,
தமிழரசும் மருத்துவரும்,
அசராத காவலரும்;
கண்கண்ட தெய்வங்கள்:
என்றும் வாழ வேண்டுமே.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment