Thursday, 14 May 2020

வீட்டுக்கு அடங்கு!

தாய் சொன்னா(ள்)மதிக்கலயே!
தாரஞ் சொன்னா(ள்)அடங்கலயே!
அப்பஞ் சொல்லும் மீறினதாலே:
இப்போ நானே ஒரு கொரனா 
ஆனேன்  அதனாலே!

அரசாங்கம் சொல்லச் சொல்ல
அடங்கலயே பாவி!
கையெடுத்துக் கும்பிட்ட காவலர்க்கும்
வணங்கலயே சாமி!
எல்லார்க்கும் டிமிக்கி விட்டுத் தெருப்
பொறுக்கித் திரிஞ்சேன்:
கொரனா தொற்று வாங்கி இப்போ
தீண்டத்தகான் ஆனேன்.

ஊரு கூடும் கூட்டத்திலே ஒன்றிணையக் கூடாதுணு.
போக்குவரத்து மூடி வச்சி பாது காத்த அரசே!
எதுக்குமே அடங்கலயே மொள்ளமாறி நானே:
கொரனாவால முடங்கிப் போனேன் அனாதையப் போலே.

ஊருசுத்திப் பேரெடுத்த ஊதாரி என்னால்
ஊருக்குள்ள எத்தனைபேர் கொரனாணு சொன்னால்;
நானூறுக்கும் மேலேயாம் நான்தானே பொறுப்பு.
வேணாம் சாமி என் நிலமை வீட்டுக்கு
நீ அடங்கு!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment