உலகத்தின் அச்சாணி யாம்
உழவுத் தொழில் போற்று வள்ளி.
தைநாளாம் உழவர் தினம்
வையகத்தின் வாழ் நாளாம்.
உழவனை தொழுவோ மானால்
உலகம் நின்று வாழும் வள்ளி.
சேறூன்றும் கால்கள் போற்று
வறுமையை போக்கும் வள்ளி.
ஏறோட்டும் கைகள் தானே
சோறூட்டும் தாய்க ளாகும்.
உழவனை தொழுவோ மானால்
உலகம் நின்று வாழும் வள்ளி!
விவசாயி வாழ வேண்டும்
விவசாயம் வாழ வள்ளி.
உலகுக் கெல்லாம் படியளக்கும்
உயிர் காக்கும் ஈசனவன்.
உழவனை தொழுவோ மானால்
உலகம் நின்று வாழும் வள்ளி!
தொழிலுக்கு மூல வனாம்
தொல்லுழவன் தானே வள்ளி
மூடை நெல் உயர வள்ளி!
கால மழை விவசாயிதான்.
உழவனை தொழுவோ மானால்
உலகம் நின்று வாழும் வள்ளி!
உழுதவன் கைகள் காய்த்து
சிவந்தபழம் போல வள்ளி.
அழகனவன் விவசாயி தான்
முருகனவன் தமிழ் கடவுள்
உழவனை தொழுவோ மானால்
உலகம் நின்று வாழும் வள்ளி!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment