Friday, 8 May 2020

மகா உலகப்போர்!

மகா உலகப் போர் இதை,
எகத்தாளமா சிலபேர் கதை;
அவுல் கிடைத்தார் போல் அதை
கொரனாவை  மெல்கிறார்கள்--சாமி
யாரோடு போர் என்றீர்!
கொரனாவோடு போர் கண்டீர்!

வடை போச்சே என்பதல்ல,
உயிர் போச்சே என்று சொல்ல.
அரசு சொல்லும் வழி முறையில்
வாழ்ந்தால் உயிர் தப்பலாம்--சாமி
யாரோடு போர் என்றீர்
கொரனாவோடு போர் கண்டீர்.

வாள் வேண்டாம் தோள்கொடு!
தாள் பூட்டி வீடடுள் இரு!
தொடர் அறுந்தால் தோற்றுவிடும்.
இடர் அறிந்து ஓடிவிடும்--சாமி
யாரோடு போர் என்றீர்!
கொரனாவோடு போர் கண்டீர்

எதையிங்கு கொண்டு வந்தோம்!
அதையங்கு எடுத்துச் செல்வோம்!
பேசிப்பேசி என்ன கணடோம்?
ஊசிப்போன வடையானோம்--சாமி
யாரோடு போர் என்றீர்!
கொரனாவோடு போர் கண்டீர்

எவரெவர் நம்பிக்கையோ!
அவரவர்க்கு சோதனைகள்.
அப்படித்தான் பேரிடர்கள்-
இப்படித்தான் சாதனைகள்--சாமி
யாரோடு போர் என்றீர்!
கொரனாவோடு போர் கண்டீர்!

பேர்வாங்கி ஆள்வதென்ன!
ஊரோங்கி வாழ்வதென்ன!
மூச்சு நின்றால் பேச்சில்லை
ஆணவங்கள் ஆவதில்லை--சாமி
யாரோடு போர் என்றீர்!
கொரனாவோடு போர் கண்டீர்!

யார் முடிப்பார் என்றாய்ந்து
நேர்ந்த திரு விளையாடலிது.
எதை உணர்த்தும் ஆட்டமிதோ!
அதை நடத்தி முடித்துவிட்டான்--வல்ல
இறையவனை மறுத்தார்க்கு
இயற்கை தந்த பாடமிது.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment