என்னமோ தெரியல
இன்னசமும் மறக்கல.
சின்ன வயசு உறவுகள்
நெஞ்ச விட்டு அழியல.
பள்ளிக் காலம் பழகிய
கள்ளம் போல் அரும்பிய
உள்ளம் ரெண்டு நெருங்கிய
வெள்ளை க்காதல் மறக்கல.
அண்ணன் தம்பி பிறவிகள்
வண்ணம் இல்லா உறவுகள்
ஒன்று பட்ட பரிவுகள்
துண்டு பட்டும் அழியல.
வாண்டுகளாய் அன்பர்கள்
கூண்டு விட்ட அன்பர்கள்
ஆலமர ஊஞ்சல் ஆட்டி
ஆடியதும் மறக்கல.
பால் இனம் வேற்றுமையை
வாலிபம் கற்ற கதைகளை
தோழமை செய்த அரட்டைகளை
கேளிக்கையாய் அழியல.
பள்ளி செல்ல மறுத்ததும்
துள்ளி துள்ளி அழுததும்
வாத்தியார் இழுத்ததும்
நேற்று போல் நினைவிலும்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment