சுயமாய் சிந்தனை அறிய மாட்டான்,
பிறரின் நிந்தனை உணர மாட்டான்;
எவனோ ஒருவன் தூண்ட லிலே:
இவனே படுவான் தூண்டி யிலே.
சும்மா தானும் இருக்க மாட்டான்,
சொன்னால் கேட்டும் அடங்க மாட்டான்,
தன்னால் தானே தான் சுட்டு:
புண்ணாள் ஆவான் கேடு கெட்டு.
நல்லதும் தானே எண்ண மாட்டான்,
நன்மை செய்யவும் விட மாட்டான்;
தடால் ஒன்றைப் போட் டுடைப்பான்:
தன்னால் இருப்பைக் காட்டி டுவான்.
வளர்வோர் பிறரை வளர்க்க மாட்டான்,
கழலும் மூத்தோரை தடுக்க மாட்டான்;
உரிமை எல்லாம் பறித்து வைப்பான்:
அடிமைகள் மட்டும் இருத்தி நிற்பான்.
நல்லார் கூட்டம் சேர்க்க மாட்டான்,
வல்லார் ஏற்றம் வாழ்த்த மாட்டான்;
எல்லாம் நானே மேல் என்பான்:
கொள்கை தானே கோள் செய்வான்.
வழிவிடத் தகுதி பார்க்க மாட்டான்,
வழிவழி முடிக்க ஏற்க மாட்டான்;
தலைவன் வழியே நான் என்பான்:
தலைமுறை தொடர வழி செய்வான்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment