நாளை என்பதும் சமாதானமல்ல.
நாளை என்பது சமாதானமல்ல.
கோழையின் நழுவலே நாளை எனும் சொல்.
பாலை வனத்தில் நீர் தேடல் போலே
நாளை என்பதும் கானல் நீர் தானே.
வாய்ச்சொல் வீரன் வாய் மொழி வாக்கு.
மாயமான் மாரீசன் பொய் வழி போக்கு.
தேனாய் ஒழுக்கும் தான்பேசும் அடுக்கு
வீணாய் வழுக்கும் வீண்மோசம் முடுக்கு.
கொ.பெ.அய்யா.
No comments:
Post a Comment