பொய் வாக்குக் கூட்டம் எல்லாம்
அய்யோணு போகுமே!
செய்வாக்குத் தீரம் வெல்லும்--சமூகம்
மெய்யேணு கொள்ளுமே!
விலைக்கு வாங்கும் யோசனைகள்
ஜொலிக்கின்ற போலிகள்.
பூசப்பட்ட சாயம் வெளுக்கும்--புரியும்
வேசம் போட்ட காலிகள்.
அடிதடி அலப்பரை எல்லாம்.
தடாலடி அயோக்யம் சொல்லும்;
வெறித்தனம் வேகம் தோற்கும்--என்றும்
விரித்திடாது சிலாக்யம்.
வெற்றுக் கூச்சல் ஆடமாட்டான்.
கற்றுக் கொள்ள நாளெடுப்பான்.
சுற்றம் ஓட சூழுரைப்பான்--நல்லோன்
கற்றவித்தை கவிதை செய்வான்.
அமைதியாய் பொறுத் திருப்பான்
சமயம் பார்த்துக் காத்திருப்பான்
பலஹீனம் புரிந்திருப்பான்--புத்திமான்
களம் அறிந்து வெல்லுவான்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment