Monday, 4 May 2020

தொண்டன்.

வெற்றுக் கூச்சல் போடுவான்,
புற்றீசல் போல் கூடுவான்.
தருணமும் உணர மாட்டான்
தலைவனிட்ட ஆணையென்பான்.

தந்தை சொல் மதிக்கமாட்டான்
தலைவன் ஆணை மீறமாட்டான்.
மனைவி மக்கள் எண்ண மாட்டான்
தலைவனுக்கு தலை கொடுப்பான்.

தலைவனுக்கே தொண்டன் என்பான்;
தருதலையாய் பெயர் கெடுப்பான்.
கட்சி கட்சி என்றலைவான்
கட்சியாக்கி ஊர் பகைப்பான்.

டீக் கடையில் டீக் குடிப்பான்,
டீக் கிளாசை ஒளித்து வைப்பான்.
காசு கொடுக்க வக்கில்லாமல்,
ஓசி டீக்கு தொங்கி நிற்பான்.

தலைவா நீ வாழ்க என்பான்,
தள்ளு முள்ளில் தான் வீழ்வான்.
இவன் யாரோ அவன் பறப்பான்.
அவன் வாழ இவன் இரப்பான்.

தொண்டு செய்யவே தொண்டன்.
தூண்டி வாழவே தலைவன்.
ஓலைக் குடிசையில் தொண்டன்.
மாடி வீட்டில் தலைவன்.

அவன் குடும்பம் வாழ்வதற்கு;
இவன் குடும்பம் தெருவிலின்று.
தலைவன் பிள்ளை தலைவனான்,
தொண்டன் பிள்ளை கிழவனான்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment