உலகம் அறியாத புதுமை--இந்த
கொரனா புரியாத புதுமை--நம்
உடல் பொருள் ஆவியை கொரனா பறிப்பது:
உலகம் அறியாத புதுமை.
அலைகடல் ஏவும் சுனாமியைப் போலே,
மேவும் நெருப்பது விழுங்குது போலே;
நிலையும் இழந்ததே உலகே அதனாலே:
உலகம் அறியாத புதுமை.
பாருமய்யா இதை பாருமய்யா!
வாழப் பிறந்தோர் நிலை பாருமய்யா!
நம்வாழ்வு எந்நாளும் நாம் வாழ அன்றோ!
மண்வாழ்வும் காக்கவே பிறந்தவர் அன்றோ!
அரசதும் ஆணையும் செயலும் நம்மாலே,
கொரனாவை ஒழிக்கும் ஓர்வினையாலே--இந்த
உறுதியும் வாழ்வில் நேர்ந்ததினாலே
உலகம் அறியாத புதுமை.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment