கட்சிகள் தோற்றம் போதும்!.
காட்சிகள் மாற்றம் வேணும்.
பொய்கள் கேட்டது போதும்--நேர்மை
மெய்மை ஆய்ந்திட வேணும்.
மாற்றும் ஆட்டைகள் போதும்!.
மாற்றம் நேர்ந்திடல் வேணும்.
தூற்றும் அரசியல் போதும்--தூய்மை
ஆற்றும் நெறியியல் வேணும்.
மேடைப் பேச்சுகள் போதும்!.
வாய்மைக் கூற்றுக்கள் வேணும்.
ஓட்டு வேட்டைகள் போதும்--அறிவு
ஏற்றிடும் மாற்றங்கள் வேணும்.
வாரிசுப் பழமை போதும்!.
ஆள்வினைத் திறமை வேணும்.
அடிமைச் சிந்தை போதும்--சுயமாய்
விடுதலை அறிவு வேணும்.
வணிக அரசியல் போதும்!.
புனித வாழ்வியல் வேணும்.
கணிக்கும் தேர்தல் போதும்--வாழும்
மனிதம் தேரந்திடல் வேணும்.
கொ.பெ.அய்யா.
No comments:
Post a Comment