Friday, 1 May 2020

தீர்ப்பும் நானே! தீர்வும் நானே!


தீர்ப்பும் நானே! தீர்வும் நானே!
தீர்க்கும் உனைநான் தீர்க்க வந்தேனே!
தீர்ப்பும் நானே! தீர்வும் நானே!
தீர்க்கும் உனைநான் தீர்க்க வந்தேனே!

வாழும் வாழ்வும் வாழ்வின் முறையும்
வாழும் என்னிடம் உயிர் கொள்ள வந்தாயோ!
வாழும் வாழ்வும் வாழ்வின் முறையும்
வாழும் என்னிடம் உயிர் கொள்ள வந்தாயோ!

உலகின் பொருளில் உறையும் நீயே!
கூடும் இடத்தில் கொரனா நீயே!
எதிலும் ஒட்டும் தொற்றும் நீயே!
எதிலும் ஓட்டும் தொற்றும் நீயே!
உன்னைத் தொட்டால் ஒடுங்கும் உயிரே!
உன்னைத் தொட்டால் ஒடுங்கும் உயிரே!

நான் நினைந்தால் முடியும் எதுவும் என்னாலே!
நான் நினைந்தால் முடியும்ம் எதுவும் என்னாலே!
அறிவாய் கொரனா உன் ஆணவம்  பெரிதா!
அறிவாய் கொரனா உன் ஆணவம்  பெரிதா!
சாகவா! இன்றோடு சங்கிலி அறுத்தேன்
தீய தீயுனையே தீய்க்க வந்ததொரு
தீர்ப்பும் ! தீர்வும் நானே!
தீர்க்கும் உனைநான் தீர்க்க வந்தேனே!
தீர்ப்பும் நானே! தீர்வும் நானே!
தீர்க்கும் உனைநான் தீர்க்க வந்தேனே

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment