பீதி எதற்கு தேனம்மா?
நாதி உனக்கு நானம்மா.
காதல் கொடுக்கும் தெம்பம்மா:
கொரனா அடங்கும் நம்பம்மா.
எண்ணும் நாட்கள் கண்ணிலே.
இன்னும் சொல்ல சேதியை!
மின்னலைப் பிடித்து படிக்கிறேன்.
என்னடி எழுதின துடிக்கிறேன்.
கடன் அடைக்க ஆசைப்பட்டேன்.
கடலை நான் தாண்டிவந்தேன்.
சொந்த மண்ணை நம்பவில்லை.
வந்த மண்ணில் சொந்தமில்லை.
உலக மெல்லாம் ஊரடங்கோ!
வழிக லெல்லாம் கதவடைப்போ!
தண்ணீரீன் அலைகள் உறவோ!
கண்ணீரீன் கடலும் தடையோ!
பீதி எதுக்கு தேனம்மா?
நாதி உனக்கு நானம்மா.
காதல் கொடுக்கும் தெம்பம்மா:
கொரனா அடங்கும் நம்பம்மா
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment