கைகூப்பி வணங்குங்கள்--இதோ நம்
கண்கண்ட தெய்வங்கள்.
மறுபிறப்பு உலகமிதை--சுகமாய்
பிரசவித்த மருத்துவரை
கைகூப்பி வணங்குங்கள்--இதோ நம்
கண்கண்ட தெய்வங்கள்.
கைகால்கள் கழுவுவதும்--இரு
கைகூப்பி வணங்குவதும்
கலாச்சாரம் கற்றுத்தந்த--உயிர்
காப்புறுதி மருத்துவரை
கைகூப்பி வணங்குங்கள்--இதோ நம்
கண்கண்ட தெய்வங்கள்.
வாய்மூக்கு கவசமதும்--பகவான்
வர்த்தமானர் அறிமுகம்.
விலகியும் தனித்திருக்க--அன்றே
பழக்கிய மருத்துவரை
கைகூப்பி வணங்குங்கள்--இதோ நம்
கண்கண்ட தெய்வங்கள்.
சுத்தந்தான் சோறுபோடும்--காக்கும்
சுகாதாரம் மருத்துவம்.
ஊர்சுற்றக் கூடாதென--தமிழ்
உபதேசித்த மருத்துவரை
கைகூப்பி வணங்குங்கள்--இதோ நம்
கண்கண்ட தெய்வங்கள்.
தூய்மை போற்றும் பணியாளர்--நம்மை
காவல் காக்கும் காவலர்,
கருணைமனக் கொடையாளர்--செயல்
தமிழரசும் மருத்துவரே!
கைகூப்பி வணங்குங்கள்--இதோ நம்
கண்கண்ட தெய்வங்கள்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment